deepamnews
இலங்கை

சனிக்கிழமை முதல் முட்டை விலை குறைகிறது – அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானம்

எதிர்வரும் சனிக்கிழமை முதல் முட்டை ஒன்றின் மொத்த விலையை ஐந்து ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை முதல் 45 ரூபா என்ற மொத்த விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முட்டை உற்பத்தியாளர்கள் பாரவூர்திகள் மூலம் முட்டையை விற்பனை செய்யும் பின்னணியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முட்டை இறக்குமதி கேள்வி பத்திரத்திற்கமைவாக 20 பேர் விலைமனுக்களை கையளித்துள்ளனர்.

நேற்று பிற்பகலுடன் அது தொடர்பான விலைமனுக்கோரல் செயற்பாடுகள் நிறைவுறுத்தப்பட்டன.

இது தொடர்பான விலைமனுக்கோரல்கள் இறுதி அனுமதிக்காக வர்த்தக அமைச்சின் தொழில்நுட்ப குழுவிடம் கையளிக்கப்பட்டதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முட்டை இறக்குமதிக்காக விலை மனுக்களை கையளித்த அனைத்து இறக்குமதியாளர்களும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்களை முன்வைத்துள்ளனர்.

அதில் பெரும்பாலான விண்ணப்பத்தாரிகள் இந்தியர்கள் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைகளை பிற்போடுவதற்கு அரசாங்கம்  சதி திட்டம் அரசாங்கம் – அனுரகுமார திசாநாயக்க குற்றச்சாட்டு

videodeepam

எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலும் நடத்தப்படமாட்டாது – வஜிர அபேவர்தன

videodeepam

இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு

videodeepam