deepamnews
இலங்கை

வசந்த முதலிகேவின் தடுப்புக் காவலை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும்

2022, ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட மாணவர் ஆர்வலர் வசந்த முதலிகேவின் தன்னிச்சையான தடுப்புக்காவலை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஏழு மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.

29 வயதான வசந்த முதலிகே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பமிடப்பட்ட உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம், அரசாங்கம் நீண்டகாலமாக நீக்குவதாக உறுதியளித்த ஒரு கொடூரமான சட்டமாகும் என்று மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

முதலிகேவின் பிணை மனு மீதான விசாரணை, இன்றைய தினம் நீதிமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.

எனினும், அரசாங்கத்தின் சார்பாகச் செயல்படும் சட்டமா அதிபர் திணைக்களம் அதை எதிர்த்தால் நீதிமன்றம் பிணையை அனுமதிக்காது என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜனவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த விசாரணையின் போது முதலிகேவுக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் அல்லது பிணை வழங்குவதற்கு உடன்படுமாறும் சட்டமா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் 7 மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய மன்றம், சிவிகஸ், முன்னணி பாதுகாவலர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கை தொடர்பான சர்வதேச செயற்குழு மற்றும் சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் என்பன இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளன.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் முக்கிய தீர்மானம் இன்று

videodeepam

அரசியல் கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி

videodeepam

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 500 முதல் ரூபா 750 வரை அதிகரிக்கும் சாத்தியம்

videodeepam