deepamnews
இலங்கை

ரணில் விக்கிரமசிங்கவின் உறுதிமொழி பொது மக்களை ஏமாற்றும் தந்திரம் – ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் குற்றச்சாட்டு

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய உறுதிமொழி பொது மக்களை ஏமாற்றும் தந்திரம் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

எரியும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து வருவதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் 13 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான இந்த உரையாடலை ஆரம்பித்தார்.

எனவே அவரின் இனவாதச் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்வதாக டில்வின் சில்வா குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

நீர்கொழும்பு – துன்கல்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

videodeepam

முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்ததது.

videodeepam

இலங்கையின் இறையாண்மைக்காக சீனா முன்னிற்கும் –  சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் தெரிவிப்பு

videodeepam