deepamnews
இந்தியா

அதானிக்கு ஏற்ற விதத்தில் இந்தியாவின் வெளிவிவகார கொள்கை மாற்றப்பட்டது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கடந்த எட்டு வருடகாலப்பகுதியில் கௌதம் அதானியின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதானிக்கும் இடையில் எவ்வகையான உறவுள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதானி குழுமம் பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபடுவதற்கு ஏற்றவகையில் விதிமுறைகள் மீறப்பட்டன மாற்றப்பட்டன எனவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் விதிமுறைகள் மீறப்பட்டு அதானி குழுமத்திடம் அபிவிருத்திக்காக ஆறு விமானநிலையங்களை ஒப்படைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அதானியின் நிறுவனத்திற்கு சாதகமான விதத்தில் இந்தியாவின் வெளிவிவகார கொள்கை மாற்றப்பட்டது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

காற்றாலை திட்டத்தை அதானிக்கு வழங்குமாறு இந்திய பிரதமர் அழுத்தங்களை கொடுத்தார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார் என 2022 இல் இலங்கையின் மின்சார சபையின் முன்னாள் தலைவர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தெரிவித்தார் எனவும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முற்பட்ட 6 பேர் கைது

videodeepam

தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் –  திருமாவளவன் கைது

videodeepam

விடுவிக்க கோரி நளினி உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

videodeepam