துருக்கி – சிரியாவில் நிலநடுக்கத்திலிருந்து உயிர்பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருக்க பாதுகாப்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி, சிரியாவில் நீர் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹன்ஸ் குளூஜ் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
தண்ணீர் மற்றும் சுகாதார அமைப்பில் கடும் சேதத்தை நிலநடுக்கம் ஏற்படுத்தி உள்ளது.இதனால் தொற்று நோய்கள், நீர்வழி நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் ஐரோப்பா சந்தித்துள்ள மாபெரும் இயற்கை பேரழிவு இந்த நிலநடுக்கம் என்றும் ஹான்ஸ் குளூஜ் தெரிவித்துள்ளார்.