தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி உயிரோடு இருக்கிறார் என்பது அவரை சிறுமைப்படுத்தும் செயல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் பிரபாகரன் மரணம் அடையவில்லை எனவும் அவர் உயிருடனும் நலமுடனும இருக்கிறார். இதனை அவரின் குடும்பத்தின் அனுமதியுடன் அறிவிக்கிறேன் என அறிவித்துள்ளார்.
நெடுமாறனின் இந்த அறிவிப்பு உலகத் தமிழரிடையே இன்னும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது என அது தொடர்பில் கூறுகையிலே சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருது தெரிவித்த அவர், ‘2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என்று இலங்கை இராணுவம் அதற்கு சாட்சியாக பிரபாகரனின் உடலை காட்டியது.
‘பிரபாகரன் ஒன்றும் திரைப்பட நடிகர் அல்ல. எப்ப வரனுமோ அப்ப வருவேன் என சொல்லக் கூடியவர் அல்ல. இயற்கையில் பேரன்புக்காரர் பிரபாகரன்.
விடுதலைப் புலிகளின் தலைவரை பொறுத்தவரை எவ்வளவோ நிர்பந்தங்கள் வந்தபோதும் கூட, நாட்டை விட்டு போகமாட்டேன் என்பதுதான் அண்ணனின் நிலைப்பாடு.
தனக்காக, தன் நாட்டு விடுதலைக்காக, தன் கட்டளையை ஏற்று பல இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து, பல ஆயிரம் போராளிகள் உயிர் நீத்ததை பார்த்தவர், தன் உயிரை பாதுகாத்து தற்காத்து ஒரு இடத்தில் உயிரோடு இருப்பார் எனில் அவரை நீங்கள் சிறுமைப்படுத்துவதாக அர்த்தம்.
இப்போது பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என ஏன் சொல்லப்படுகிறது என்பது சிறிதுநாள் கழித்து அனைவருக்கும் தெரிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.