துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46,400 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரிய நகரங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது.
மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப்படையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.
இதற்கமைய, துருக்கியில் பெப்ரவரி 6 முதல் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 40,642 ஆக உயர்ந்துள்ளது.
வடமேற்கு சிரியாவில் 4,400 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் சுகாதார அமைச்சகம் 1,414 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
சிரியாவின் ஜிண்டாய்ரிஸ் நகரில் 70 சதவீதம் கட்டுமானங்கள் நிலநடுக்கத்தால் உருக்குலைந்துள்ள நிலையில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் தலைசாய்க்கவும் இடமில்லாமல் தவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.