திருமணத்துக்குப் புறம்மான பாலியல் உறவுக்கு தடை விதிக்கும் சட்டமூலத்தை இந்தோனேஷிய நாடாளுமன்றம் நேற்று அங்கீகரித்தது.
புதிய சட்டத்தின்படி, திருமணம் செய்யாமல் தம்பதியினர் இணைந்து வாழ்வதும் குற்றமாகும்.
திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதியினருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அதேவேளை, திருமணத்துக்கு அப்பாலான பாலியல் உறவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
மேற்படி சட்டத்திருத்தங்களுக்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுக்கு தடை விதிக்கும் சட்டத்தை இந்தோனேஷிய வர்த்தக சங்கங்களும் விமர்சித்தன. சுற்றுலாத்துறைக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறப்பட்டது.
எனினும், இந்தோனேஷியாவின் சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் இச்சட்டத்தினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.