deepamnews
இலங்கை

முட்டையின் விலை 80 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம்

முட்டையின் விலை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகி உள்ளது. இவ் அறிவிப்பை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.

பண்டிகை காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் தெளிப்படுத்தும் போதே அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முட்டையின் விலையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று அந்த சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். “முட்டையின் விலை 80 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.இது தொடர்பில் எனக்கு தகவல்கள் கிடைக்கவில்லை.

வழமையாக பண்டிகை காலங்களில் முட்டைகளின் விலை அதிகரித்து காணப்படும். ஆனால் பாரியளவில் அதிகரிக்காது. நாட்டில் கேள்விகளுக்கு ஏற்ப முட்டைகள் காணப்படுகின்றன.

அத்தோடு முட்டைகளுக்கு நிர்ணய விலை காணப்படுகிறது.குறித்த விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும்.

இருப்பினும் நிர்ணய விலை காரணமாக முட்டை உற்பத்தி குறைவடைந்துள்ளது. உற்பத்தியாளர்கள் முட்டைகளைச் சந்தைக்கு விற்பனை செய்வது குறைவடைந்துள்ளது”.என கூறியுள்ளார்.

மேலும் இந்நிலையில் நாட்டின் தேவைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி இல்லை எனவும் இறக்குமதி செய்வதன் மூலம் குறைந்த விலையில் முட்டைகளை விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts

328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நேற்றையதினம் இரவு முதல் நீக்கம்!

videodeepam

ஆங்கில மொழிக்கல்வியை மேம்படுத்த அதிக கவனம் – அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்க்கிறார் ஜனாதிபதி ரணில்  

videodeepam

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தைகள் இருவரின் கழுத்தில் காயம்

videodeepam