deepamnews
இலங்கை

சிற்றுண்டிகளின் விலைகள் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலைகள் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விலை குறைக்கப்படும் உணவுப்பொருட்களின் விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நேற்று முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைப்பதற்கு பிரிமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுடைய பாண் இறாத்தலொன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது.

அத்துடன், ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விற்பனை விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

யாழில் 21வயது இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

videodeepam

இலங்கைக்கான நிதி உதவிக்கு நாணய நிதியம் அனுமதி: ஜனாதிபதி இன்று விசேட உரை

videodeepam

தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி!

videodeepam