deepamnews
இலங்கை

தொலைதூர பேருந்துகளில் இருக்கைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான தொலைதூர சேவை பஸ்களில் ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (15) மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்தில், நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தலைமையில் அதற்கான ஆசன ஒதுக்கீடு சாளரம் திறந்து வைக்கப்பட்டது.

அங்கு, இருக்கை முன்பதிவு தொடர்பான இணையதளம் திறக்கப்பட்டு, மூன்று மொழிகளில் 24 மணி நேரமும் செயல்படும் 1315 ஹாட்லைன் எண் மூலம் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Related posts

கோழி இறைச்சி விலை குறைப்பு

videodeepam

நுரைச்சோலை மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் பழுதடைந்தது – காஞ்சன விஜேசேகர

videodeepam

செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை!

videodeepam