deepamnews
இலங்கை

ஆதி சிவன் ஆலயத்தை மூடி ஜனாதிபதி மாளிகை அமைக்கப்படவில்லை – லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தை மூடி ஜனாதிபதி மாளிகை அமைக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ள நிலையில் விரைவில் புதிய லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளரும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரத்தியோகச் செயலாளருமான உமாச்சந்திர பிரகாஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று வெள்ளிக்கிழமை, அண்மையில் ஊடகங்களில் பேசு பொருளான கிரிமலை ஆதி சிவன் ஆலயத்தை பார்வையிடுவதற்காக நானும் கலாநிதி ஆறு திருமுருகனும் கடற்படை அதிகாரிகளுடன் சென்றிருந்தோம்.

சுமார் 32 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலையத்தில் அகப்பட்டிருந்த குறித்த ஆலயம் இடுப்பாடுகளுடன் காணப்பட்டமையை நாங்கள் அவதானித்தோம்.

ஆதிசிவன் ஆலயத்தின் அத்திவாரங்கள் மிகவும் தெளிவாகத் தெரியும் நிலையில் அதனை மூடி ஜனாதிபதி மாளிகை அமைக்கப்படவில்லை என்பதை நேரில் சென்று பார்த்தபோது தெரியவந்தது.

அதேபோல் சடையம்மா மடம் பாதுகாப்பாக உள்ள நிலையில் அங்கு உள்ள கிருஷ்ணர் ஆலயத்தில் சிவலிங்கம் ஒன்று கொடிமரம் வைக்கப்படும் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது .

இந்த சிவலிங்கம் ஆதி சிவன், சிவலிங்கமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது ஏனெனில் கிருஷ்ணர் ஆலயத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் நிரந்தரமாக அமைக்கப்பட்டதாக தெரியவில்லை.

ஏப்ரல் ஆறாம் திகதி பங்குனி உத்திர தினத்தில் புதிய சிவலிங்கம் ஒன்றை ஆதி சிவன் ஆலயத்தில் அமைக்கப்பட்ட இடத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இந்தியாவின் இலங்கைக்கான ஆதரவை உறுதிப்படுத்தியது சர்வதேச நாணய நிதியம்

videodeepam

வலுவடையும் ரூபாய் பெறுமதி…. டொலர் பெறுமதியில் வீழ்ச்சி !

videodeepam

மக்கள் சேவையில் இழுத்தடிப்புச் செய்யாமல் பொறுப்புடன் செயற்படுமாறு அரச அதிகாரிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை

videodeepam