சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி எதிர்காலத்தில் இலங்கையில் வட்டி விகிதங்களைக் குறைக்க உதவும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கடன் வசதி கிடைக்காவிட்டால் அரசாங்கம் அதிக வட்டிக்கு நிதியை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என ஊடக சந்திப்பின் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மூன்றாவது அல்லது நான்காம் காலாண்டுக்குள் இலங்கையின் பணவீக்கத்தை ஒற்றை பெறுமதிக்கு கொண்டு வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.