deepamnews
இலங்கை

நீதித்துறைக்கும் சட்டவாக்க சபைக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் – இலங்கை நீதிச்சேவை சங்கம்

நீதித்துறைக்கும் சட்டவாக்க சபைக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என இலங்கை நீதிச்சேவை சங்கம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதம், அண்மையில் அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் அடிப்படையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையைக் குறிப்பிடுகிறது.

கடந்த 18ஆம் திகதி இலங்கை நீதிச்சேவைச் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூடி இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதுடன், அங்கு எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் குறித்தும் இக்கட்டுரையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நீதி நிர்வாகத்திற்கு எவரேனும் அழுத்தங்களை பிரயோகிக்குமாயின் அதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயங்கப்போவதில்லை என நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இலங்கை நீதிச்சேவை சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.  

Related posts

வடக்கு கிழக்கில் சட்டவிரோத விகாரைகளை அமைக்கலாம் என எந்த சட்டத்தில் உள்ளது? – சபா குகதாஸ்.

videodeepam

பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய மாணவர்களுக்கு செல்வம் அடைக்கலநாதன் நிதி உதவி

videodeepam

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் சாவு!

videodeepam