deepamnews
இலங்கை

வழக்கம்பரை ஆன்மீக அறக்கட்டளை மற்றும் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை இணைந்து நடாத்திய உதவித்திட்ட நிகழ்வு

இன்றையதினம் வழக்கம்பரை ஆன்மீக அறக்கட்டளை மற்றும் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை ஆகியன இணைந்து நடாத்திய உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு வழக்கம்பரை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய இரண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி வைத்ததுடன், சுழிபுரம் விக்டோரியா கல்லூரி, பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம் மற்றும் தொல்புரம் விக்கினேஷ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 75 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஆன்மீக அறக்கட்டளையின் இயக்குனர் திருச்சிற்றம்பலம் ஜனார்த்தனன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மதகுருமார், ஆசிரியர்கள், மாணவர்கள், பயனாளிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த உதவித் திட்டங்களுக்கான நிதியை அமெரிக்காவைச் சேர்ந்த ஞானச்சந்திரன் சின்னையா அவர்கள் ஒருங்கிணைத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.

videodeepam

மக்களின் வேதனை அறிந்தே அரசியலுக்கு வந்தேன் ; சாணக்கியன் போன்றவர்களுக்கு பொருந்தாது – அமைச்சர் டக்ளாஸ் தெரிவிப்பு

videodeepam

எந்த தரப்பின் பின்னாலும் நாங்கள் செல்லமாட்டோம் என்கிறார்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

videodeepam