deepamnews
இந்தியா

சென்னை விழா ஏப்ரல் 29 முதல் மே 14 வரை – 1.50 கோடி ரூபாய் செலவில் ஏற்பாடு

 கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் உணவுத் திருவிழாவான சென்னை விழா, ஏப்ரல் 29 முதல் மே 14 வரை சென்னை நகரில் உள்ள தீவு மைதானத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் 1.50 கோடி ரூபாய் செலவில் இந்த விழா நடத்தப்படுகிறது.

இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், ஈரான், நேபாளம், நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, கிர்கிஸ்தான், உகண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனிப்பட்ட கைவினைஞர்கள் தங்கள் சொந்த நாட்டு கைவினைப் பொருட்களை இந்த விழாவில் காட்சிப்படுத்துவார்கள்.

இந்த நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் 80க்கும் மேற்பட்ட விற்பனையகங்களை அமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் சென்னையில் தமிழ்நாடு மருத்துவ மதிப்பு பயண உச்சி மாநாடு ஒன்றையும் தமிழக சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

Related posts

நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார் – திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல்

videodeepam

இந்தியா – சீன இராணுவ தளபதிகளுக்கிடையில்  19 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை!

videodeepam

இந்திய பிரதமர் மோடியின் வீட்டின் மேல் ஆளில்லா விமானம் பறந்தததால் பரபரப்பு.

videodeepam