பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் இருந்து சூறாவளி அச்சுறுத்தல் காரணமாக சுமார் 5 இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மொக்கா என பெயரிடப்பட்டுள்ள குறித்த சூறாவளி கரையைக்கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மணித்தியாலத்துக்கு 170 கிலோமீற்றர் வேகத்தில்காற்று வீசுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு மில்லியன் மக்கள் தற்காலிகமாக வசிக்கும் உலகின்மிகப்பெரிய ஏதிலிகள் முகாமான காக்ஸ் பஜாரை இந்த சூறாவளி தாக்கக்கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே முகாம் உள்ள பகுதியில் மழை பெய்து வருவதால் அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷில் கடந்த இரண்டு தசாப்தங்களில் மிகப்பலமிக்க சூறாவளியாக இந்த சூறாவளி இருக்கும் என வானிலை அதிகாரிகள் குறிப்பிடுகின்றன..
அதேநேரம் பங்களாதேஷ் – மியன்மார் கடற்கரையை அண்மித்த விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் தகவல்கள் தெரிவிக்கின்றன.