உக்ரைனின் கெர்சனில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதை அடுத்து, ஸ்டானிஸ்லாவ் பகுதி மக்கள் உக்ரைன் கொடியை ஏற்றி, தேசிய கீதத்தை பாடி கைத்தட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.
உக்ரைனில் போர் தொடங்கியதும் ரஷ்ய படைகள் முதன் முதலில் கெர்சனை கைப்பற்றி தாக்குதலை தீவிரப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், 8 மாதங்களுக்கு மேலாக கெர்சன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், அங்கிருந்து தங்களது படைகளை வெளியேறுமாறு ரஷ்ய இராணுவம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இது போரில் திருப்பு முனையாக அமைந்துள்ளதாக ஸ்டானிஸ்லாவ் பகுதி மக்கள் உக்ரைன் கொடியை ஏற்றி, தேசிய கீதத்தை பாடி கைத்தட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.