deepamnews
இலங்கை

சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம் – பரீட்சை நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்காக முப்படையினரினதும், பொலிஸாரினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் 4, 72,553 மாணவர்கள் தோற்றவுள்ளனர். பாடசாலை மூலம் 3,94,450 பேர் தோற்றவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள 3,568 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சைக்காக 40 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

Related posts

ஜனாதிபதிக்கு ஏதிராக நடவடிக்கை: பொதுஜன பெரமுன விடுத்துள்ள அறிவிப்பு

videodeepam

பலாலி- சென்னை விமான போக்குவரத்து இம்மாத இறுதியிலேயே ஆரம்பம்

videodeepam

விடுதலைப் புலிகளின் தலைவர் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்.

videodeepam