deepamnews
இலங்கை

பலாலி- சென்னை விமான போக்குவரத்து இம்மாத இறுதியிலேயே ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான போக்குவரத்து, இந்த மாத இறுதியிலேயே ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான போக்குவரத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விமான சேவை தொடர்பாக இந்திய விமான நிறுவனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டார்.

இந்த சேவையை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

முன்னதாக அடுத்த வார தொடக்கத்தில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

Related posts

நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் – குழந்தைகளுக்கான சுவாச நோய் விஷேட வைத்தியரின் அறிவுறுத்தல்

videodeepam

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு – பதவிக்காலத்தை நீடிக்க திட்டம்

videodeepam

பொருளாதார மீட்சிக்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை செயற்படுத்த வேண்டும் – மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு

videodeepam