deepamnews
இலங்கை

எரிக் சொல்ஹெய்மின் இலங்கை பயணம் குறித்து அச்சமடைய வேண்டியதில்லை – அரசாங்கம்

நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இராஜதந்திரிகளின் இவ்வாறான பயணங்கள் குறித்து அச்சமடைய வேண்டியதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில்,  எரிக் சொல்ஹெய்ம்மின் பயணம் புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவா என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தனவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,

வெவ்வேறு இராஜதந்திர நபர்கள் இலங்கைக்கு பணம் மேற்கொள்வது தொடர்பாக, அச்சம் கொள்ளத் தேவையில்லை.

நாம் அனைத்து நாடுகளுடனும் பிரிவினையற்ற வெளியுறவுக் கொள்கையின் ஊடாக பயணிப்பதற்காகவே செயற்படுகிறோம்.

சுயாதீன அரசு என்ற ரீதியில் நாம் ஏனைய அரசாங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டியேற்படாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

14 வயது சிறுமி மீது இரு வேறு சந்தர்ப்பங்களில் இருவரால் பாலியல் வன்புணர்வு!

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு!

videodeepam

முன்னாள் காதலியை நீதிமன்றத்தில் வைத்து அறைந்தவருக்கு விளக்கமறியல்.

videodeepam