ஒடிசாவில் இடம்பெற்ற பாரிய தொடருந்து அனர்த்தத்தில் மரணித்தவர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸ் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த அனர்த்தத்தில் 288 பேர் பலியானதுடன் 800க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில், பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு தமது அனுதாபத்தை வெளியிட்டுள்ள அவர், சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் இந்தியாவில் இடம்பெற்ற இந்த அனர்த்தம் குறித்து வதந்திகளை சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி வருவதாக ஒடிசா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.