deepamnews
இலங்கை

இலங்கையின் நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்த சீனாவுடன் கலந்துரையாடல்

இலங்கையில் நிலத்தடி நீரின் தரம் குறைவடைந்துள்ளதால் மக்களுக்கு சுகாதார ரீதியில் பல்வேறுவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதனை கருத்திற்கொண்டு ஐ.நாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் கீழ் நாட்டில் நீர் மற்றும் சுகாதாரத்தை உகந்த மட்டத்தில் பேணுவதற்கான , சீன ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞான அகாடமியால் நாட்டில் பல விசேட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடலான்று இடம்பெற்றுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (11.06.2023) நீர் வழங்கல் சபையின் புதிய கட்டிடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கையில் குடிநீரின் தரத்தை மேம்படுத்துவதற்காக உலகின் அதியுயர் தொழில்நுட்பத்தை வழங்கி, அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வு கூடங்கள், புதிய ஆராய்ச்சி சாதனங்கள், சுத்திகரிப்பு இயந்திரங்கள், இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்ற சீனாவின் நடவடிக்கைக்கு அரசின் சார்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

சீன – இலங்கை கூட்டு நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் எமது நாட்டில் நீர் வழங்கல் மற்றும் நிலத்தடி நீர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆராய்ச்சிக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் குடிநீரின் தரத்தை மேம்படுத்தல் மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை மக்களின் சார்பில் சீனாவுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் சிறப்பு அதிதிகளாக சீன ஆராய்ச்சி மற்றும் அறிவியல் அகாடமி பேராசிரியர் Min Yang, பேராசிரியர் Wei Yuansong , பேராசிரியர் Yawei Wang உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தொடர்ந்து பொதுத்தேர்தல் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு

videodeepam

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார்படுத்தல்களை முன்னெடுத்துள்ளேன் –  தம்மிக்க பெரேரா தெரிவிப்பு.

videodeepam

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் 35 ஆவது நினைவேந்தல்

videodeepam