deepamnews
சினிமா

கமல்ஹாசன் நடிப்பில் 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் தற்போது மீண்டும் ரிலீஸாகி அமோக வரவேற்பு !

கமல்ஹாசன் நடிப்பில் 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் தற்போது மீண்டும் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’. இந்த திரைப்படம் மீண்டும் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் இந்தப் படத்திற்கு மாபெரும் வரவேற்பை தந்து வருகின்றனர். இந்த வாரம் மட்டும் 7 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸாகும் இந்தப் படத்திற்கான வரவேற்பு தியேட்டர் உரிமையாளர்களையும் வியக்கவைத்துள்ளது.

17 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படம் வெளியான போதும் கமல்ஹாசனின் திரைவாழ்விலேயே மிக முக்கியமான திரைப்படம் ஆனது. மேலும், கமலின் தீவிர ரசிகரான கௌதம் வாசுதேவ் மேனன், கமலை சிறந்த கிளாசிக் ஹீரோவாக இந்தப் படத்தில் காட்டியிருப்பார். மேலும், திரைக்கதையிலும் மிக நேர்த்தியாக அமைந்த இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படமானது.

Related posts

நடிகர் கமல்ஹாசனிடம் சிறீதரன் எம்.பி முக்கிய கலந்துரையாடல்

videodeepam

விஜய் மகன் ஆசை மறுக்கப்பட்டது ஏன்?

videodeepam

ஜெயிலர் படத்தை விட அதிக வசூல் செய்து நம்பர் 1 இடத்தை பிடித்தது லியோ !!!

videodeepam