deepamnews
இந்தியா

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை – மதுரை உயர் நீதிமன்றம் தெரிவிப்பு .

1974 ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பீட்டர் ராயன், தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே இரண்டு பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு இதனை அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தப்படி, பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களை இந்த பகுதியில் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அந்த உடன்படிக்கையை மீறும் வகையில், இலங்கை கடற்படையினர் செயற்படுவதாகவும் ஆகவே உடன்படிக்கையை இரத்து செய்து கச்சத்தீவை மீட்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது,

இலங்கையில் இருந்து மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு மத்திய அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சட்டரீதியான உதவி வழங்கப்படுவதாகவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் இந்த நீதிமன்றுக்கு இல்லை என அறிவித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது .

Related posts

மாலைத்தீவில் ஓய்வெடுக்கும் நடிகர் ரஜினிகாந்த் – வைரலாகும் புகைப்படம்

videodeepam

நான் ஆட்சிக்கு வந்தால் சி.எஸ்.கேவில்  11 வீரர்களும் தமிழர்கள் மட்டும்தான் – சீமான் அதிரடி அறிவிப்பு.

videodeepam

கர்நாடகாவில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து – எழுந்துள்ள சர்ச்சை

videodeepam