deepamnews
இலங்கை

 முல்லைத்தீவு – பாலிநகர் பகுதியில் வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது 

இன்று அதிகாலை 04.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது 

மாற்றுவலுவுள்ள ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த வர்த்தக நிலையமே இவ்வாறு இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் குறித்த வர்த்தக நிலையத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் முன்னெடுத்து இருந்த வேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மல்லாவி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

Related posts

இலங்கையை இனியும் வங்குரோத்து நாடாக கருத முடியாது – ஜனாதிபதி

videodeepam

சட்ட விரோத மணல் அகழ்வு குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்து

videodeepam

மீண்டும் பிரதமர் பதவி ஏற்பாரா மஹிந்த –  நாமல் வெளியிட்ட கருத்து

videodeepam