deepamnews
இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மமலிங்கத்தின் நினைவேந்தல்!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 38ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று காலை 7 மணியளவில் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் இடம்பெற்றது.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆ.சி.கணேசவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

ஈழத்தமிழரின் சமகால அரசியல் எனும் தலைப்பில் நினைவுப் பேருரையினை யாழ்ப்பாண பல்கலைக் கழக அரசறிவியல்த் துறைப் பேராசிரியர் 
கே.ரி.கணேசலிங்கம் ஆற்றினார்.

நினைவஞ்சலியில் இலங்கை  தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்,முன்னாள்  மாகாண சபை உறுப்பினர்கள் முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் கைது.

videodeepam

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு

videodeepam

நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசை, உரத் தட்டுப்பாடு உருவாகும் – ஜனாதிபதி எச்சரிக்கை

videodeepam