deepamnews
இலங்கை

அணு ஆயுதம் கொண்ட கடற்படையை  உருவாக்கின்றார் வடகொரியா ஜனாதிபதி.

வடகொரியா முதல் முறையாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன்கொண்ட நீர்மூழ்கி கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

இந்த கப்பலை வெளிப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்ற வடகொரிய ஜனாதிபதி  கிங் ஜோங் உன், நாட்டின் கடற்படையின் துரித வளர்ச்சி மற்றும் அதன் ‘அணு ஆயுதமயமாக்கல்’ ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வடகொரியா, தனது முதலாவது தந்திரோபாய அணுத் தாக்குதல் திறன்கொண்ட நீர்மூழ்கி கப்பலின் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.

இது அமெரிக்கா மற்றும் அதன் ஆசிய நட்பு நாடுகளை எதிர்கொள்ள அணு ஆயுதம் கொண்ட கடற்படையை உருவாக்கும் கிம் ஜோங் உன்னின் திட்டத்தின் முக்கிய பகுதியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வட கொரிய முக்கிய வரலாற்று நபராக அறியப்படும் கிம் குன் ஓகே இன் பெயர், 841 என்ற எண் கொண்ட குறித்த நீர்மூழ்கி கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

இந்த நீர்மூழ்கி கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிகழ்வானது  கிம் ஜோங் உன் தலைமையில் நடைபெற்றது என அந்த நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நீருக்கடியில் இருந்து தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏவும் வகையில் இந்த நிர்மூழ்கிக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், வடகொரிய கடற்படைக்கு இதுவொரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நீர்மூழ்கி கப்பல் சுமந்து செல்லக் கூடிய ஏவுகணைகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் எதனையும் வடகொரிய ஊடகம் வெளியிடவில்லை.

இந்த நிலையில் வடகொரியாவின் 10 புக்கொக்சோங் 3 என்ற ஏவுகணைகளை சுமந்து சென்று நீருக்கு அடியில் இருந்து தாக்குதல் திறன்கொண்டதாக குறித்த நீர்மூழ்கி கப்பல் உள்ளது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

வவுனியாவில் 10 வயதுச் சிறுமி 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் – மூவர் கைது!

videodeepam

20 நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாவில் நிறைவேறியது தீர்மானம்

videodeepam

இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது வழங்கியுள்ளது என்கிறார் அலி சப்ரி

videodeepam