deepamnews
இலங்கை

நாட்டில் மற்றுமொரு கொவிட் மரணம் பதிவு.

நாட்டில் மற்றுமொரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது.

கம்பஹா போதனா வைத்தியசாலையில் இந்த கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்குள் பதிவான இரண்டாவது கொவிட் மரணம் இதுவாகும்.

இதேவேளை, தற்பொழுது குழந்தைகளிடையே பல வகையான சுவாச நோய்கள் பரவி வருகின்றன என குழந்தை நல மருத்துவர்  தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பரிசோதிக்கப்பட்ட குழந்தைகளில், பெரும்பாலானவர்களுக்கு இன்ப்ளூவன்ஸா வைரஸ் காணப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு மேல் சுவாசக் குழாயில் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக வைரஸ் காய்ச்சல்கள். இருமல், சளி, வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

சஜித்துக்கு  எதிரான மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க நீதிமன்றம் கால அவகாசம்

videodeepam

யாழ்ப்பாண விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கிய ஜப்பானிய தூதுவர்.

videodeepam

வடக்கு ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்கும் வைபவத்தை புறக்கணித்த தமிழ் எம்பிக்கள்

videodeepam