deepamnews
இலங்கை

ஐரோப்பா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கட்டுநாயக்கவில் கைது.

போலி கிரேக்க வீசாமூலம் ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல வந்த வர்த்தக குடும்பம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமானத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குடும்பம் ஒரு கோடி நாற்பது லட்சம் ரூபாவை தரகர் ஒருவரிடம் செலுத்தி அதற்குரிய போலியான கிரேக்க விசாக்களை தயார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் 43 வயதுடைய தந்தை, 47 வயதுடைய தாயார் மற்றும் 21 மற்றும் 16 வயதுடைய 2 மகன்கள் ஆகியோர் என தெரியவந்துள்ளது.

Related posts

மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலை குறைப்பு

videodeepam

பிரச்சினைகளை தேடாமல் தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என்கிறார் மனோ கணேசன்

videodeepam

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர் டானியல் வூட் யாழ்ப்பாணம் வருகை.

videodeepam