deepamnews
இலங்கை

இலங்கையின் கடன் நிவாரண பேச்சுவார்த்தைகளில் தலையிடப் போவதில்லை – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

இலங்கையின் கடன் நிவாரண பேச்சுவார்த்தைகளில் தலையிடப் போவதில்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டுக்குள் இலங்கை செலுத்த வேண்டிய 17 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைவௌியுடன், மொத்தமாக 24 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைவௌியை இலங்கையின் கடன் நிவாரண செயற்பாடு நிரப்பும் என எதிர்பார்ப்பதாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை மற்றும் அதன் கடன் வழங்குநர்களிடையே இடம்பெறும் பேச்சுவார்த்தைகளுக்கமைய, கடன் நிவாரண நிபந்தனைகளின் அடிப்படையில் கடன் மறுசீரமைப்பு இடம்பெறும் விதம் மாறுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இந்த விடயங்களில் சர்வதேச நாணய நிதியம் தலையிடப் போவதில்லை என நிதியத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

Related posts

ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் சடுதியாக வீழ்ச்சி – 35.3 வீதமாக பதிவு

videodeepam

ஒக்டோபர் மாதத்துக்குள் மின்சார சபையை மறுசீரமைக்க உத்தேசம் –  இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தகவல்

videodeepam

ஏப்ரல் 21 தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் – சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

videodeepam