deepamnews
இலங்கை

முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பேருந்து கட்டணத்தை உயர்த்துமாறு  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் பொது பேருந்து சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.  

எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு கோரப்பட்டுள்ளது.

உதிரி பாகங்கள், குத்தகைகள் ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் அதிகரிப்பின் அடிப்படையில் பொது பேருந்து சங்கத்தினால், பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

மேலும், தற்போதைய நிலையில் பேருந்து கட்டணங்களை குறைக்கும் யோசனையை முன்வைக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள வருடாந்த பேருந்து  கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் இந்த வாரத்திற்குள் வழங்கப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மற்றுமொரு தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல்

videodeepam

நாணய நிதிய கடன் தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை – மைத்திரிபால சிறிசேன  அறிவிப்பு

videodeepam

இந்திய பிரதமரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை – இரா.சம்பந்தன் எழுதிய கடிதம்.

videodeepam