deepamnews
இலங்கை

காரைநகரில் கடற்படை வேட்டை – 137 கிலோ கஞ்சாவுடன் 3 சந்தேகநபர்கள் கைது!

யாழ். காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது இன்று அதிகாலை 137 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

காரைநகர் கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றைக் கடற்படையினர் சோதனை செய்தபோது படகின் உள்ளே ஒரு மூடைக் கஞ்சாவும், கடலில் வீசப்பட்ட நிலையில் மேலும் இரு மூடைகளில் கஞ்சாவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மூன்று மூடைகளில் இருந்தும் மொத்தமாக 137 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கஞ்சா கடத்திய படகில் இருந்த கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

 மருந்து தட்டுப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

videodeepam

ஒவ்வொரு பாடசாலைகளையும் வீடாக நினையுங்கள் – வடமாகாண ஆளுநர் அறிவுரை

videodeepam

எதிர்வரும் காலங்களில் மின்துண்டிப்பு நேரம் நீடிக்கும் சாத்தியம் 

videodeepam