deepamnews
இலங்கை

புதிய நாட்டை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில்  இன்று சுதந்திர தினம் கொண்டாட்டம்.

76 ஆவது சுதந்திர தின விழாவை இன்று  காலி முகத்திடலில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

‘புதிய நாட்டை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.

இவ்வாண்டு சுதந்திர தின கொண்டாட்ட பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.

இம்முறை சுதந்திர தின விழாவை பல்வேறு கலை நிகழ்வுகள் அலங்கரிக்கவுள்ளன. முப்படைகளின் அணிவகுப்புகளும் கோலாகலமாக இடம்பெறவுள்ளன.

மரியாதை அணிவகுப்பிப்பில் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 3 ஆயிரத்து 461 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆயுதம் தாங்கிய வாகனங்கள் உள்ளிட்ட 69 வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தி 19 விமானங்களும் இம்முறை சுதந்திர தின கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளன.

7 ஹெலிக்கொப்டர்கள், 16 ரக 5 விமானங்கள், 3 ஜெட் விமானங்கள் என்பன இதில் உள்ளடங்குகின்றன.

இலங்கை கடற்படையின் 1009 உறுப்பினர்களும் இம்முறை சுதந்திர தின கொண்டாட்ட அணிவகுப்பில் இணையவுள்ளனர்.

Related posts

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பொருத்தமான தலைவர் ரணில் விக்ரமசிங்க – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்படலாம்: பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு

videodeepam

நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறல் – உடனடி விசாரணைவேண்டும் ஜனாதிபதி உத்தரவு!

videodeepam