deepamnews
சர்வதேசம்

தேசியப் பாதுகாப்பு திட்டத்தை வெளியிட்டார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தேசியப் பாதுகாப்பு திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

நீண்ட தாமதத்துக்குப் பின்னர், அமெரிக்காவின் இந்த திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தவும், ரஷ்யாவை அடக்கி வைக்கவும் அமெரிக்கா விரும்புவதை, இந்த பாதுகாப்பு திட்டம் வெளிப்படுத்துகிறது.

மற்ற நாடுகளுடன் சேர்ந்து செயற்படுவதன் அவசியத்தை வலியுறுத்தும் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு திட்டம், போட்டியாக இருக்கும் நாடுகளுடனும் சேர்ந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய மிரட்டல், பருவநிலை மாற்றம், சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு, எதிராக மற்ற நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அமெரிக்கப் பாதுகாப்பு திட்டம் கூறுகிறது.

அறிக்கையில் சீனாவுக்காக 48 பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் மிகப்பெரிய போட்டி நாடாக சீனாவையே  வொஷிங்டன் கருதுகிறது.

உலகப் போக்கை மாற்றி அமைக்கும் எண்ணமும் ஆற்றலும் சீனாவுக்கு உண்டு என்று அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் (Jake Sullivan) தெரிவித்துள்ளார்.

Related posts

உக்ரைனின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்திய ரஷ்யா -10 பேர் உயிரிழப்பு

videodeepam

இம்ரான் கானை கைது செய்வதற்கான பிடியாணை நிறுத்திவைப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு

videodeepam

பிரித்தானிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொழிற்கட்சி முன்னிலை

videodeepam