deepamnews
இலங்கை

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பு

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, நாடாளுமன்றத்தை இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியுள்ளது. பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் முற்பகல் 10.30 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

நாளை காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நீதி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட 6 சட்டமூலங்களும் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளன.

அதன்பின்னர் அன்று மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை சட்டசபை ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் மற்றும் 21 ஆம் திகதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன்,  எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 5:00 மணி வரை நடைபெறவுள்ள இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

Related posts

சரத் வீரசேகரவின் பாராளுமன்ற உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்.

videodeepam

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

videodeepam

திட்டமிட்டவாறு உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும்

videodeepam