deepamnews
இலங்கை

லிட்ரோ விலை தொடர்பில் மகிழ்ச்சித் தகவல்!

நவம்பரில் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக லிட்ரோ கேஸ் லங்கா நேற்று (24) தெரிவித்துள்ளது.

இது குறித்து லிட்ரோ கேஸ் லங்காவின் தலைவர் முதித பீரிஸ் கூறுகையில்,

“லிட்ரோ கேஸ் செப்டம்பரில் திறைசேரிக்கு 6.5 பில்லியன் ரூபாவை திருப்பிச் செலுத்தியுள்ளது. ஒக்டோபரில் 7.5 பில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

உலக எரிவாயு விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதால், நவம்பர் முதல் வாரத்தில் எரிவாயு விலை மேலும் குறையும் வாய்ப்பு இருப்பதாக முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ கேஸ் லங்கா தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை 2022 ஒக்டோபர் 05 அன்று கடைசியாகக் குறைத்தது. அந்தவகையில் தற்போது 12.5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் ரூ. 4280, 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ. 1720, மற்றும் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ. 800 விலைகளில் விற்பனையாகின்றன.

Related posts

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

videodeepam

கிளிநொச்சியில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு!

videodeepam

பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு 11 ஆவது இடம் – 157 நாடுகள் பட்டியலில்

videodeepam