deepamnews
இலங்கை

பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு 11 ஆவது இடம் – 157 நாடுகள் பட்டியலில்

உலகில் அதிக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 11 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

157 நாடுகளை உள்ளடக்கிய வகையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு, புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் Steve H. Hanke வெளியிட்ட வருடாந்த அறிக்கையிலேயே இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு , வேலைவாய்ப்பின்மை ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தரப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்தமையே இலங்கை இந்தப் பட்டியலில் இடம்பெற முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

அந்த அறிக்கையின் பிரகாரம், சிம்பாப்வே உலகிலேயே பொருளாதார ரீதியாக மிகவும் நெருக்கடியான நாடாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

வெனிசுவேலா, சிரியா ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களில் உள்ளன.

இந்த பட்டியலுக்காக 157 நாடுகள் தொடர்பில் ஆய்வுகள் இடம்பெற்றிருந்தன.

Related posts

இன்றுமுதல் பால் மாவின் விலை குறைப்பு – பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானம்

videodeepam

மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள்  தளர்த்தப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

videodeepam

மன்னாரில் ஒரு தொகுதி ‘டைனமைட்’ வெடி பொருளுடன் இருவர் கைது.

videodeepam