பிரேசிலில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இடது சாரிக் கட்சியின் லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.
அங்கு சில தசாப்த காலங்களாக ஆட்சி செய்து வந்த ஜனாதிபதி ஜயர் போல்சனாரோவை தோற்கடித்ததன் மூலம் இடது சாரி அணியின் தலைவர் ஆட்சியை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் பிரேசிலில் நீண்டகாலமாக நிலவிய வலது சாரி ஆட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெற்றிக்காக லூலா பெற்ற வாக்கு சதவீதம் 50.9 ஆகும். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜயர் போல்சனாரோ 49.1 சதவீதம் வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டார்.