deepamnews
இலங்கை

வடமாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!

வடமாகாணம், வடமேற்கு மாகாணம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் கனமழையுடனான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் வடமேற்கு திசையில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக இலங்கையின் வடக்கு கடற்கரையை ஒட்டி தமிழக பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

எனவே, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.

பிற இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே பொதுமக்கள் இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஐக்கிய அரபு இராச்சியத்தின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

videodeepam

யாழ்ப்பாணத்தில் மலையக மக்களின் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு

videodeepam

முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்குமாறு நீதிச் சேவைகள் சங்கம் கடிதம்

videodeepam