deepamnews
இலங்கை

ஒன்றரை ரில்லியன் வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசிப்பு –  அநுரகுமார குற்றச்சாட்டு

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்கும் பரிந்துரையை ஜனாதிபதி முன்வைக்கவில்லை. 2023ஆம்  ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஒன்றரை ரில்லியன் வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 ஜனாதிபதியால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று முன்வைக்கப்பட்டதன் பின்னர் பாதீடு தொடர்பில் ஊடகங்களுக்கு  அநுரகுமார திஸாநாயக்க  கருத்து தெரிவித்தார், இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஏதேனும் நிவாரனம் கிடைக்கப் பெறுமா என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணிக்கும் வகையில் காணப்படுகிறது.

பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு குறைந்தப்பட்சமேனும் நிவாரனம் வழங்கும் எவ்வித பரிந்துரைகளும் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.

மாறாக வரி அதிகரிப்பை மாத்திரம் வரவு செலவுத் திட்டம் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வரி அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் ஒன்றரை ரில்லியன் ரூபா அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மாகாண அதிகாரம் மத்திக்கு ஆளுநர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் – அவைத் தலைவர் சிவஞானம் கோரிக்கை

videodeepam

பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

videodeepam

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தோற்கடிக்கப்படும் – சஜித் பிரேமதாச தெரிவிப்பு

videodeepam