deepamnews
இலங்கை

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை – கையை விரித்தார் ரணில்

ஓகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது போதாது. எனவே மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அதிகாரம் அமைச்சருக்கும் அமைச்சரவைக்குமே இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான எம்.பிக்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், மின்சாரக் கட்டணம் கடந்த ஓகஸ்ட் மாதம் அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அதுபோதாது. இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை மின்சார சபை 152 பில்லியன் ரூபாய் நட்டமடைய உள்ளது. 2013ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 300 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அடுத்த வருடம் வழமையான மின்சார உற்பத்திக்கு மேலதிகமாக 420 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது. அடுத்த வருடம் சாதாரணமாக மழைப் பெய்யுமாக இருந்தால் 352 பில்லியன்களும், அதிகள மழை பெய்து வெள்ளம் நிலைமைகள் ஏற்பட்டால் 295 பில்லியன்களும்  தேவைப்படுகிறது.

அரசாங்கத்துக்கென வருமானம் இல்லாத நிலையில் இந்த பாரிய நிதியை எவ்வாறுப் பெற்றுக்கொள்வது? நாணயத்தாள்களை மீள அச்சிடுவதா? அப்படியென்றால் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும். இல்லை வற் வரியை அதிகரிகப்பதா? வற் வரியை அதிகரித்துக்கொண்டிருந்தால் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து அதிகரிக்கும்.

எனவே, மூன்றாவதாக எமக்குள்ள ஒரே தீர்வு மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது மட்டுமே. மின்கட்டணத்தை அதிகரிக்காது மின்சாரத் துண்டிப்புகளுக்கு செல்லலாம். ஆனால், அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் கல்வில் பொதுத் தரா தர உயர் தரப் பரீட்சைகள் நடைபெறும். எனவே மின்துண்டிப்புக்கு செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts

யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் கோர விபத்து!

videodeepam

சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை – வெடித்தது சங்கானையில் போராட்டம்!

videodeepam

சட்ட விரோத மணல் அகழ்வு குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்து

videodeepam