deepamnews
இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தலைமையில் இன்று விசேட சர்வகட்சி கூட்டம்

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று  மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வகட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தலைமையில் இந்த சர்வகட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், 2022 டிசம்பர் 13ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட, நல்லிணக்க முன்னேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்டு கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடும் எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான்கு மாதங்களில் கையிருப்பு தீரும் – மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நாடு ஏற்படும் ஆபத்து

videodeepam

வாகன கொள்வனவு தொடர்பில் பொலிஸாரின் எச்சரிக்கை

videodeepam

யாழ். போதனா மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை அகற்ற புதிய நடைமுறை

videodeepam