deepamnews
இந்தியா

எந்த  தயக்கமும் இன்றி  தேர்வை எதிர்கொள்ளுங்கள்- மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற மாணவர்களுக்கு எந்த பயமும் வேண்டாம். எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொதுத்தேர்வு எழுத இருக்கின்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ, மாணவிகளே அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.

ஒரு கவலையும் வேண்டாம். எந்த பயமும் வேண்டாம். இது இன்னொரு பரீட்சை, அவ்வளவு தான். அப்படித்தான் இந்த தேர்வை நீங்கள் அணுக வேண்டும். எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கிற புத்தகத்தில் இருந்துதான் வரப்போகிறது. அதனால் உறுதியோடு தேர்வை எழுதுங்கள்.

உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும், மனஉறுதியும் தான். அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்துவீட்டீர்கள் என்று அர்த்தம். தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பது அல்ல. உங்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவது. அதனால் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

தேர்வை பார்த்து பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து படியுங்கள். புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக, முழுமையாக எழுதுங்கள். நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் போல நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாழ்த்துக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related posts

தமிழகம் மரக்காணம் முகாமின் 48 இலங்கை ஏதிலிகளுக்கு இந்திய கடவுச்சீட்டுகள்

videodeepam

தண்ணீர் பாதுகாப்பு முயற்சியில் மக்களும் பங்கேற்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு

videodeepam

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இன்று – தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம்!

videodeepam