deepamnews
சர்வதேசம்

புட்டினை கைது செய்யும் முயற்சி யுத்தத்திற்கான அழைப்பாக பார்க்கப்படும் – முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி எச்சரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை வெளிநாட்டில் கைது செய்ய முயற்சிப்பது, யுத்தத்திற்கான அழைப்பாக ரஷ்யாவால் பார்க்கப்படும் என அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்தது.

யுக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்துவது குறித்து தமது கூற்றுக்களை மையப்படுத்தியுள்ளமை அடிப்படையில், புட்டின் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம்சாட்டியது.

இந்தநிலையில், ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார்.

புட்டின் கைது செய்யப்பட்டால், ரஷ்யாவின் ஆயுதங்கள் நாடொன்றைத் தாக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலைமை ஒருபோதும் நடக்காத நிலைமை என்பது தெளிவாகிறது. ஆனால், நடக்கும் என கற்பனை செய்வோம்.

ஒரு அணுசக்தி அரசின் தற்போதைய தலைவர், ஜேர்மன் எல்லையில் வைத்து கைது செய்யப்படுகின்றார் என்றால், அது ரஷ்ய கூட்டமைப்புக்கு எதிரான போர் பிரகடனமாகும்.

அவ்வாறு நடந்தால், தங்களது ரொக்கெட்டுக்கள் உள்ளிட்ட ஏனையவை, ஜேர்மன் சான்ஸலர் அலுவலகம் உள்ளிட்ட பலவற்றை நோக்கிப் பறக்கும் என்றும் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார்.

Related posts

பாகிஸ்தான் பள்ளிவாசலில் வெடிப்பு சம்பவம் – 28 பேர் பலி, 150க்கும் மேற்பட்டோர் காயம்

videodeepam

புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை – ரிஷி சுனக்கிற்கு பறந்த அவசர கடிதம்

videodeepam

அடுத்த ஜி- 20 உச்சி மாநாட்டில் புடின் கலந்துகொண்டால் கைது செய்யப்படமாட்டார்!  – பிரேசில் ஜனாதிபதி தெரிவிப்பு.

videodeepam