deepamnews
இலங்கை

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 1.6 மில். டொலர் நிதியுதவி வழங்கியது ஜப்பான்

இலங்கையில் சமூக-பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மனிதாபிமான உதவிக்காக ஜப்பான் அரசாங்கம் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்புக்கு வழங்கியது.

இந்த நிதியானது, “நெருக்கடியில் உள்ள பெண்களை வலுவூட்டல்” என்ற புதிய செயற்திட்டத்தின் ஒரு பகுதியென்பதுடன், இது பெப்ரவரி 2023 முதல் டிசெம்பர் 2023 வரை செயற்படும் என்றும் இது பாலின மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொண்ட குறைந்தது 1,200 பெண்கள் உட்பட அவர்களின் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது வீழ்ச்சியடையும் அபாயத்தில் உள்ள 500 பெண்கள் தலைமையிலான நுண் நிறுவனங்களுக்கும், வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தில் உள்ள 2,000 நபர்களுக்கும் மேலும் ஆதரவளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போதுள்ள நெருக்கடிக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் பதிலளிப்பு மற்றும் மீட்பு முயற்சிகளில் பின்தள்ளிவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்வதுடன் இந்த நேரத்தில் அவர்களின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதே எங்கள் இலக்காகும் என்று இலங்கைக்கான ஜப்பான் தூதுவரானமிசுகோஷி ஹிடேகி வலியுறுத்தினார்.

Related posts

கிளிநொச்சியில் புதையல் தேடி அகல்வுபணி!

videodeepam

இலங்கையில் தேர்தல் என்பது நகைச்சுவையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது  – பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு

videodeepam

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட 4வது நாடாக இலங்கை!!

videodeepam