deepamnews
இலங்கை

ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிராந்திய சபைகளை அமைக்குமாறு பிரதமரிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை

ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்பதால் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிராந்திய சபைகளை அமைக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கில் எங்களுடைய பிரச்சினைகள் தெற்கில் இருந்து வேறுபட்டவை. ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிராந்திய சபைகள் வேண்டும் என்று நான் பரிந்துரைத்தேன் என்று அவர் மேலும் கூறினார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய சபையில் அங்கம் வகிக்க தாம் சம்மதிக்கவில்லை என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பிரதமர் தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் மற்றவர்களுடன் என்னைப் பார்க்க விரும்பியதால், அவரைச் சென்று சந்தித்தேன்.

நாங்கள் தேசிய சபையில் சேர வேண்டும் என்று அவர் விரும்பினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஏழெட்டு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டியிருப்பதாலும், தென்னிலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களையே இந்த சபை கையாள்வதால் நான் கலந்து கொள்வதில் பிரயோசனமிமில்லை என்பதாலும் கூட்டங்களில் கலந்து கொள்வதில் சிரமம் இருப்பதாகவும் கூறினேன்.

வடக்கிற்கு பயணம் செய்து அங்குள்ள பிரச்சினைகளை ஆராயுமாறு பிரதமருக்கு நான் பரிந்துரைத்தேன்.

எம்முடன் கலந்துரையாடியதன் பின்னர் தனது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவரிடம் கூறினேன்.

இந்த ஆலோசனையை ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இராணுவத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

videodeepam

இலங்கையுடனான சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைக்கு இந்திய நாணயத்தை பயன்படுத்த அனுமதி

videodeepam

உள்ளூராட்சி மன்ற  தேர்தல் தாமதமடையக்கூடும்  – அரசாங்கம் அறிவிப்பு

videodeepam