deepamnews
இலங்கை

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மன்னாரிற்கு விஜயம்!!

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் இன்று திங்கட்கிழமை(3) மாலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமேலுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார்.

குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டது டன் அரசாங்கத்தினால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மாவட்ட மக்களுக்கு தேவைப்பாடாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்தோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், நிலையான வாழ்வாதார வழிவகைகள் மற்றும் கிராம மட்ட உட்கட்டமைப்பு விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி உள்ளதுடன், தூதுவரை கௌரவிக்கும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபரினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதம உள்ளக கணக்காய்வாளர் மூவரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

எதிர்வரும் 20ம் திகதி அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு!

videodeepam

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழரசு கட்சியின் நிலைப்பாடு! சிறிதரன்தெரிவிப்பு.

videodeepam

வவுனியாவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

videodeepam