deepamnews
இலங்கை

தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசினால் வழங்கப்படும் அனர்த்த இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய அனைத்து விபரங்களும் தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் இறப்பு சான்றிதழ் கிடைக்கப்பெற்றதுடன் அரசினால் வழங்கப்படும் இரண்டரை லட்சம் ரூபாய் இழப்பீட்டு நிதியினை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்

தெல்லிப்பழை கிழக்கை சேர்ந்த 34 வயதான மகாலிங்கம் இராகவன் எனும் இளைஞன், அம்பனை பகுதியில் உள்ள தமது தோட்டத்தில் தேட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவினை கொண்டு சென்ற வேளை மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மழை காரணமாக  எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு – சுகாதாரப்பிரிவு அறிவிப்பு

videodeepam

நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் மாவட்ட அபிவிருத்தி சபை உருவாக்கப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தல்

videodeepam

சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, வடமாகாண வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வாகனப் பேரணி ஊர்வலம் .

videodeepam