deepamnews
இலங்கை

வட்டி வீத அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்களை மாற்றாமல் அதே நிலையில் வைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நிலையான வைப்பு விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி விகிதத்தை மாற்றமில்லாமல் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதமாக வைத்திருக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

இதேவேளை, சட்டப்பூர்வ கையிருப்பு விகிதம் 4.00 சதவீதமாக மாறாமல் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய சட்டத்தரணிகள் சங்கத்தினால் குழு நியமனம்

videodeepam

வீட்டுக்குள்ளேயே முகக்கவசம் அணிந்திருங்கள்: விசேட வைத்திய நிபுணர் ஆலோசனை

videodeepam

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தேர்தலை பிற்போடவில்லை என்கிறார் நாலக கொடஹேவா

videodeepam